Saturday, November 21, 2009

வாலிப வயோதிக அன்பர்களே !! (ஓர் அறிமுகம் )

எம் பி பி எஸ் படித்து டாக்டர் ஆவோரும் உண்டு , லேகியம் விற்று (போலி) டாக்டர் ஆவோரும் உண்டு. அது போல் பல ப்ரொபசனல் பிளாக்கர்களுக்கு மத்தியில் நானும் என்னுடைய லேகியங்களை விட்டு / விற்றுப பார்க்கலாம் என்ற (உயர்ந்த???!!) நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட என்னுடைய மகர முயற்சி இது.
( கன்னியில் சனீஷ்வர சஞ்சாரம் அதிகம் இருப்பதால் கன்னி முயற்சியை தவிர்த்து விட்டேன்.)

மற்றபடி என்னுடைய பெயர் காரணம் மற்றும் பதிவு எழுத வந்த கதை பற்றியெல்லாம் குறைந்த பட்சம் என்னுடைய ஐம்பத்தோராவது பதிவில் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

நமது ப்லாக் வாசகர்கள் 'ரொம்ப நல்லவங்க' மற்றும் 'எவ்வளவு அடித்தாலும் தங்குவார்கள்' என்ற நம்பிக்கையில் நானும் ஒரு ப்லாக் ஆரம்பித்து விட்டேன்.
எனது நம்பிக்கை பொய்த்து விடாதிருக்க உங்கள் ஆதரவு பரிபூர்ணமாக கிட்டும்
என்று நம்புகிறேன் ( எத்தனை நம்பிக்கை ??? இதுதான் ஓவர்கான்பிடன்சோ ??)

உற்சாகத்துடன்....